Tuesday, August 17, 2010

அனுபவம்..... இது தான் போட்டி மனப்பான்மையா

நான் ஸ்கூல் படிக்கும்போது எங்க தெருவுலேய ஒரு பொன்னும் என்னோட படிச்சது... ஒரே ஜாதி  வேற.. (மன்னிச்சுக்கோங்க !!!)
நான் சும்மா இருந்தாலும் வீட்ட சுத்தி இருக்கறவங்க எங்க ரெண்டு பேருக்கும் போட்டின்னு சொல்லிடுருபங்க.  இன்னும் பல வூர்ல இந்த மாதிரி நடந்துட்டு இருக்கு.... சும்மா சும்மா compare பண்ணிட்டு..

அது 10th  எக்ஸாம். இதுல ரெண்டு பெரும் வேற வேற ஸ்கூல்.  ரிசல்ட் வந்தது... அந்த பொண்ணு 450 மார்க் + ஸ்கூல் first  வேற
நானோ 380 மார்க்.  நான் சும்மா இருந்தாலும் பக்கத்துக்கு வீட்டுகாரங்க சும்மா இல்லாம இத வேற compare பண்ண சொல்ல ஆரம்சிட்டாங்க..  பாஸ் பண்ணியும் வீட்ல செம அடி... கண்டிப்பா நான் ஏதும் போட்டி அது இது சொல்லவே இல்ல...  அனாலும் அடி வேற....  செம கடுப்பு...

இன்னும் ரெண்டும் வருஷம் போச்சு... இப்ப +2  வேற...  திரும்ப ஆரம்சுட்டாங்க...  ரெண்டு பேருக்கும் போட்டின்னு....  அட பாவிகளா..... 
ரிசல்ட் வர அன்னிக்கு எனக்கு சந்தோசத்த விட பயம் தான்...  என்னடா திரும்ப அடி விழுமோன்னு  தான்...   இந்த தடவ நான் அவல விட 60 மார்க் ஜாஸ்தி.  அப்பாடா....
அந்த பொண்ணு ஸ்கூல் first ....  எப்படியோ இந்த வாட்டி அவள பீட் பண்ணியாச்சு...

அப்புறம் நான் இன்ஜினியரிங் காலேஜ் ல join பண்ணி ஒரு சாப்ட்வேர் கம்பெனி இப்போ இருக்கேன்...   இந்த timela என்ன ஆச்சுனா அந்த பொண்ணு BSc  முடிச்சுட்டு லவ் marriage  பண்ணிருச்சு...   தெருவே  இத பத்தி ஒரு நாலு நாள் பேசினாங்க... எனக்கு ஒரு சந்தோசம்.  எப்போ பாரு அவள பத்தி ரொம்ப உயரமா பேசினவுங்க,  இப்போ திட்டுரங்கனுட்டு.....  அவ எப்போ 2 கொழந்தைக்கு அம்மா....

5 வருசும் ஒடிச்சு...  எனக்கு ஒருத்தி கிடைச்சா வொர்க் பண்ற இடத்துல..  லவ் பண்ணி ஒரு வழியா  செட்டில் ஆச்சு... கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முந்தி சரி என் ஆளோட caste பத்தி விசாரிச்சா... அவளும் என்னோட compare பண்ணுவாங்கலே அந்த பொண்ணோட husbandoda  தூரத்து  உறவு வேறயாம்...  என்னக்கும் இன்னும் புரியல...


இதுக்கு பேரு தான் போட்டி மனப்பான்மையோ....  இல்ல கியாஸ் தேயரிஆ ஒன்னும் புரியல போங்க.....